Ad Banner
 உலகம்

கிரீன்லாந்தைக் கையகப்படுத்த அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்காது

23/01/2026 02:21 PM

டாவோஸ், 23 ஜனவரி (பெர்னாமா) -- கிரீன்லாந்தை கையகப்படுத்த அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளாது என்று அதன் அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த கூடுதல் வரி விதிப்பதையும் அவர் மீட்டுக் கொண்டுள்ளார்.

''என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்ப்போம். பரிந்துரையில் இராணுவம் இல்லை. அது தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். உண்மையில் இல்லை. சரி. மக்கள் சிறந்த தீர்ப்பைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சிறந்த தீர்ப்பைப் பயன்படுத்துவார்கள்,'' என்றார் அவர்.

கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் கூடுதல் 10 விழுக்காடு வரி விதித்திருந்தார்.

அந்த வரி விதிப்பு பிப்ரவரி முதலாம் தேதி தொடங்கி அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வரி விதிப்பு அறிவிப்பை மீட்டுக் கொண்ட டிரம்ப், அமைதியான முறையிலேயே அமெரிக்கா கிரீன்லாந்தை கையகப்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறிவரும் டிரம்ப், அதனைக் கைப்பற்றும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)