டாக்கா, 23 ஜனவரி (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் நேற்று முதல், அதிகாரப்பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
பொதுத் தேர்தலுக்கு மூன்று வாரங்கள் எஞ்யிருக்கும் நிலையில், வாக்குகளை சேகரிக்கும் பணிகளில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இளைஞர்கள் வழிநடத்தும் தேசிய குடிமக்கள் கட்சி, டாக்காவில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்படவிருக்கும் பிரசாங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
அந்நாட்டின் இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களினால், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
அந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 1,400 பேர் பலியாகினர்.
அதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முஹமட் யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)