தோக்கியோ, 23 ஜனவரி (பெர்னாமா) -- திடீர் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், ஜப்பான் பிரதமர் Sanae Takaichi நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, 12 நாள்களுக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகாய்ச்சி, தேர்தலை நடத்துவதற்கான தமது விருப்பத்தை கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக அக்டோபரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தகாய்ச்சி மூன்று மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார்.
இருப்பினும், மக்களின் ஆதரவினால், அவர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்றும் நம்பப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசாங்கம் சீனாவுடனான பதற்றம், விலை உயர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)