நியூசிலாந்து, 23 ஜனவரி (பெர்னாமா) -- நியூசிலாந்தில் உள்ள மௌங்கானுய் எனும் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அறுவரை காணவில்லை என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
நேற்று காலை மணி 9.30 அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிலச்சரிவினால், மௌங்கானுய் மலையடிவாரத்தில் உள்ள சுற்றுலா முகாம்கள் மண்ணில் புதையுண்டன.
காணாமல் போனவர்களை தேடும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாக போலீஸ் கூறியது.
கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)