Ad Banner
 பொது

ஊழல், அதிகார மீறலை ஒழிக்கும் நடவடிக்கையில் அமலாக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம்

23/01/2026 05:27 PM

சிலாங்கூர், 23 ஜனவரி (பெர்னாமா) -- நாட்டில் e-waste எனப்படும் மின்னணு கழிவுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வது உட்பட ஊழல் மற்றும் அதிகார மீறலை துடைத்தொழிக்கும் நடவடிக்கையில், அமலாக்க அதிகாரிகளுக்கு அரசாங்கம் முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

மலேசியாவை மின்னணுக் கழிவுகளை வீசும் இடமாக மாற்றும் செயலை அமைச்சரவை கடுமையாக எதிர்ப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''ஒப்பந்தங்கள் மற்றும் குத்தகைகள் தொடர்பான எங்கள் அனுபவத்தின் அந்தப் பிரச்சனை, இவ்வளவு அழுத்தம் மற்றும் முயற்சியை மேற்கொண்டாலும், இன்னும் பலவீனங்களும் முரண்பாடுகளும் இருப்பதை நாங்கள் காண்கிறோம். எனவே அவற்றை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக, மின்கழிவுகள் குறித்த எஸ்.பி,ஆர்.எம்-இன் பரிந்துரையை ஏன் சேர்க்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில், மலேசியா மின்கழிவுகளை வீசும் இடமாக இருப்பதை முற்றிலுமாக தடை செய்வதே எங்களின் மற்றும் அமைச்சரவையின் கருத்துக்களும் முடிவுகளும் ஆகும். எனவே, இந்த விவகாரங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். நான் முழு அனுமதியும் அளிக்கிறேன்,'' என்றார் அவர்.

முக்கிய துறைமுகங்கள் வழியாக 2,000 முதல் 3,000 கொள்கலன்களில் மின்கழிவுகள் நாட்டிற்குள் கடத்தப்படுவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, சட்டவிரோத மின்கழிவு இறக்குமதி நடவடிக்கைகள் குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்துவதாக புதன்கிழமை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் குறிப்பிட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)