Ad Banner
 பொது

புத்ராஜெயா சிறுவர்களிடையே மொழி ஆற்றலை வலுப்படுத்த முன்னோடித் திட்டம்

29/01/2026 04:02 PM

புத்ராஜெயா, ஜனவரி 29 (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் பரிந்துரைக்கு ஏற்ப புத்ராஜெயாவில் உள்ள சிறுவர்களிடையே மொழி ஆற்றலை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒரு முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.

இம்முயற்சியின் வழி குறிப்பாக வார இறுதி நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கு மிகவும் நடைமுறை மற்றும் நிதானமான மொழி கற்றல் தளத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

''பிள்ளைகள் மூன்று மொழிகளை சரளமாகப் பேச வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் அல்லது அரபு. ஆனால் இந்த மொழிகளுக்கு பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் தேவை. அவர்களால் பயிற்சி செய்ய முடியாவிட்டால், வெறும் ஏட்டில் கற்பதால் மட்டும் அவர்களால் தேர்ச்சி பெற்று விட முடியாது. எனவே புத்ராஜெயாவில் வளரும் சிறுவர்களுக்கு வார இறுதி நடவடிக்கை இடங்களை அதிக அளவில் உருவாக்க விரும்புகிறோம்.'' என்றார் ஹன்னா யோ.

வீட்டிலோ அல்லது சமூகத்திலோ மொழியைப் பயிற்சி செய்ய இடம் இல்லாததால் சிறுவர்கள் தன்னம்பிக்கையை இழந்து அன்றாட வாழ்க்கையில் மொழியைப் பயன்படுத்துவதில் ஆர்வம் குறைவதாக ஹன்னா வருத்தம் தெரிவித்தார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது இன்னும் கலந்துரையாடல் அளவிலேயே உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அதை விரிவுபடுத்துவதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாகவும் இது தொடங்கப்படும் என்று கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)