Ad Banner
Ad Banner
 பொது

அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குகிறது POWERMAN மலேசியா போட்டி

30/01/2026 08:37 PM

புத்ராஜெயா, ஜனவரி 30 (பெர்னாமா) -- உலகின் மிகப்பெரிய டூயத்லான் எனப்படும் ஓட்டமும் சைக்கிள் ஓட்டமும் இணைந்த இரட்டைப் போட்டி நிகழ்வுகளில் ஒன்றான பவர்மேன் மலேசியா 2026-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குகிறது.

இந்நிகழ்ச்சி மீண்டும் புத்ராஜெயாவில் நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஓட்டம்-சைக்கிளோட்டம்-ஓட்டம் எனும் பந்தயம் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் வேளையில் ஏற்பாட்டாளர்கள் ஒரு பெரிய மைதானத்தையும் உயர் தரமான போட்டியையும் இலக்காகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டில் சிறந்த அமைப்பு பாதுகாப்பு மற்றும் தடகள அனுபவத்தில் வலுவான கவனம் செலுத்தப்படும் என்று அனைத்துலக பவர்மேன் சங்கம் IPA-வின் தலைவர் ஜான் ராட்ஷெல்டர்ஸ் கூறினார்

ஏனெனில், பந்தயத்திற்கான வலுவான தேவையைத் தொடர்ந்து 5,000 பங்கேற்பாளர்களைக் கவர ஏற்பாட்டாளர்கள் இலக்குக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

''எனவே, இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்ப்பது, விளையாட்டாளர்களுக்கு ஒரு சிறந்த சீரமைக்கப்பட்ட பயிற்சி. எனவே, ஆபத்து குறித்த மதிப்பீடும் மேற்கொள்ளப்படும். விபத்து அல்லது துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நிகழ்ந்தால், நாங்கள் கவனித்துக் கொள்வோம். பங்கேற்பாளர் படி பார்த்தால், இந்த ஆண்டு 5,000 பேர் வரை அடைய விரும்புகிறோம். எனவே, பவர்மேனில் பங்கேற்க அதிக தேவை உள்ளது.'' என்றார் ஜான் ராட்ஷெல்டர்ஸ் 

வியாழக்கிழமை புத்ராஜெயாவில் 2026-ஆம் ஆண்டு பவர்மேன் மலேசியாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், பெர்னாமா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ராட்ஷெல்டர்ஸ் அவ்வாறு தெரிவித்தார்.

நெரிசலைக் குறைப்பதற்கும் நியாயமான போட்டியை உறுதி செய்வதற்கும் குறுகிய மற்றும் நீண்ட தூர நிகழ்வுகளாகப் பிரித்து இரண்டு நாள் பந்தயத்தை அறிமுகப்படுத்து திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Unikorn Events நிறுவனம் புதிய உரிமம் பெற்றவராகவும் ஏற்பாட்டாளராகவும் நியமிக்கப்பட்ட வேளையில் புத்ராஜெயா கழகம் PPj தள ஆதரவாளராக உறுதிசெய்யப்பட்டு அந்நகரம் அதிகாரப்பூர்வமாக "பவர்மேன் சிட்டி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பவர்மேன் மலேசியாவை ஏற்று நடத்துவதில் Unikorn Events நிறுவனம் பெருமை கொள்வதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி நிக்லாஸ் யோங் கூறினார்.

''எனவே, இந்த ஆண்டு நாங்கள் செய்யும் முக்கிய மாற்றம் என்னவென்றால் 'எலீட்' பிரிவை மீண்டும் கொண்டு வருவதாகும். 'எலீட் பிரிவு எப்போதும் பவர்மேனில் முதன்மை பகுதியாக இருந்து வருகின்றது. ஏனெனில், நாங்கள் அனைத்துலக தரநிலையையும் உலகம் முழுவதிலுமிருந்து அனைத்துலக பங்கேற்பாளர்களையும் கொண்டு வந்து போட்டியிடுவதோடு, இதை ஒரு அனைத்துலக அளவிலான நிகழ்வாக மாற்றவும் செய்கிறோம்.'' என்றார் நிக்லாஸ் யோங் 

இளம் பங்கேற்பாளர்கள் பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான சூழலில் ஓட்டம் மற்றும் சைக்கிளோட்டத்தில் பங்கேற்க ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ள பவர்மேன் Malaysia 2026 நான்கு முதன்மை பிரிவுகளில் நடத்தப்படவிருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)