Ad Banner
 பொது

MY50 அட்டை;  பயணங்களைப் பதிவு செய்து சேமிப்புகளை சரிப்பார்க்கலாம்

05/02/2026 07:50 PM

ஜாலான் அம்பாங், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட Penjejak Penjimatan My50 சேவையின் மூலம் My50 அட்டை பயனர்கள் தற்போது தங்களின் பயணங்களைப் பதிவு செய்து சேமிப்புகளை சரிப்பார்க்கலாம்.
 
பயனர்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடவும் அந்த அட்டையின் நன்மை மதிப்பை முழுமையாக மேம்படுத்தவும் அச்சேவை உதவும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 

அட்டையின் பயண மதிப்பு 50 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருந்தால் அச்சேவையின் மூலம் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்படும் என்றும் லோக் கூறினார்.

அந்த பயண அட்டையின் உண்மையான விலை 150 ரிங்கிட் ஆகும், ஆனால் அரசாங்கம் மாதத்திற்கு 100 ரிங்கிட் மானியத்தை வழங்குவதால் பயனர்கள் 50 ரிங்கிட் மட்டுமே செலுத்த வேண்டும்.

இன்று சிலாங்கூர் அம்பாங்கில், Penjejak Penjimatan My50, இலக்கவியல் மயமாக்கப்பட்ட Rapid Kota மற்றும் Rapid Kembara அட்டைகளின் அறிமுக விழாவின்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லோக் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)