ஜாலான் பேராக், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- நேற்று, கோலாலம்பூர், ஜாலான் பேராக்கில் கிரேன் எனப்படும் பழு தூக்கும் இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் வங்காளதேச தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றிரவு சுமார் 10.40 மணிக்கு 32 வயதுடைய அவ்வாடவர் சாலையோரத்தில் பொருத்தப்பட்டிந்த அறிவிப்பு பலகையைப் பழுதுப் பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தொலைக் கட்டுப்பாட்டு கருவியைக் கொண்டு இயக்கப்பட்ட கிரேன், அதன் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் விளிம்பில் மோதி கவிழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்க துறையின் தலைவர் ஏ.சி.பி முஹமட் சம்சுரி முஹமட் இசா கூறினார்.
இச்சம்பவத்தில் வங்காளதேச தொழிலாளி ஒருவர் உட்பட அருகிலிருந்த Proton Persona மற்றும் BMW 523i ரக வானகங்களும் பாதிக்கப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
இதனிடையே, கிரேன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தை சுகாதார பணியாளர்கள் உறுதிப்படுத்திய வேளையில், சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்களில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியதாக, ஏ.சி.பி முஹமட் சம்சுரி கூறினார்.
1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம், செக்ஷன் 41 உட்பிரிவு-(1)-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் திரையில் காணும் எண் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)