கிள்ளான், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- தீபகற்பத்தில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் மீன் வகைகளை குறைந்த விலையில் வாங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வகுத்து வருகிறது.
Kembung, Selar மற்றும் Sembilang வகை மீன்கள் தீபகற்பத்தில் உள்ள சந்தையைக் காட்டிலும், குறைந்த விலையில் விற்கும் சபாவிலிருந்து கொண்டு வருவதற்கான வழிகளைத் தமது அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தீபகற்பத்தில் மலிவு விலையில் சந்தைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு மட்டுமல்லாமல், அம்மாநிலத்தில் உள்ள உள்ளூர் மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு குறிப்பிட்டார்.
வசதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருப்பதோடு, விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படவிருப்பதால் இதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
அதுமட்டுமின்றி, இம்முயற்சியை வெற்றி பெறச் செய்ய, மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்துடன் தீவிர கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கிள்ளான், தாமான் ஶ்ரீ அண்டாலஸ் உழவர் சந்தையில், தேசிய அளவிலான Semarak Ramadan MADANI நிகழ்ச்சியைப் பார்வையிட்டப் பின்னர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)