Ad Banner
 பொது

சட்டம், கொள்கை & கூட்டரசு அரசியலமைப்பு அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களுக்கான பிரச்சனைகள் கையாளப்படுகின்றன

07/02/2026 05:59 PM

புத்ராஜெயா, 07 பிப்ரவரி (பெர்னாமா) -- தற்போதுள்ள சட்டம், அதன் கொள்கை மற்றும் கூட்டரசு அரசியலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகம் தொடர்பான பிரச்சனைகள் கையாளப்படுகின்றன.

வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானம், புதுப்பித்தல் மற்றும் அதன் இணக்கம் ஆகியவை வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு, கே.பி.கே.டி-இன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சனையும் சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதிக்காமலும், இன மற்றும் மத உணர்வுகளை தூண்டாமலும், சட்டத்தின் அடிப்படையில் தீர்வுக் காணப்பட வேண்டும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வாயிலாக அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கட்டிட கட்டமைப்புகள், தூய்மை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவும், அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் 1976ஆம் ஆண்டு ஊராட்சி சட்டத்தின் கீழ் ஊராட்சித் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, சட்ட செயல்முறையை மதிக்கவும், ஊகங்களைத் தவிர்க்கவும், பரஸ்பர மரியாதை உணர்வைப் பேணவும், ஒருமைப்பாட்டு அமைச்சு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)