Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானுக்கு சீனா ஆதரவு

03/03/2026 04:48 PM

தெஹ்ரான், 03 மார்ச் (பெர்னாமா) -- தனது இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் ஈரானுக்கு முழு உரிமை உள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது.

அந்நிய நாடுகளின் தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் ஈரானுக்கு உரிமை இருப்பதாகவும் அதனை ஆதரிப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியிருக்கிறார்.

ஈரான் வெளியுறவு அமைச்சர் சாயிட் அப்பாஸ் அராக்ஷி-உடன், வாங் யி தொலைபேசியில் உரையாடினார்.

இந்த உரையாடலில், ஈரானி அண்மைய நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்ட கால நட்பைச் சீனா மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)