Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

2026-இன் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது

12/03/2026 05:53 PM

புத்ராஜெயா, மார்ச் 12 (பெர்னாமா) -- உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் வெளிப்புற பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்ட போதிலும், அரசாங்கம் இதுவரை, 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 4 முதல் 4.5 விழுக்காட்டில் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதை பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் சுட்டிக்காட்டினார்.

"இவ்வாண்டு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனால்தான், இவ்வாண்டு வளர்ச்சி விகிதத்தை நாங்கள் இன்னும் திட்டமிட்ட அளவிலேயே நிலைநிறுத்தி வருகிறோம். எனினும், இவ்விவகாரம் எப்போதும் பேங்க் நெகாராவால் மதிப்பாய்வு செய்யப்படும். மேலும் இந்த இலக்கு அதிகரித்து உள்ளதா அல்லது குறைந்து உள்ளதா என்பதை பேங்க் நெகாரா இறுதியில் தீர்மானிக்கும். ஆனால், இதுவரை இந்த இலக்கில் நாங்கள் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான அறிகுறி உள்ளது," என்றார் அவர்.

இவ்வாண்டு புவிசார் அரசியல் நிலைமை முதன்மை சவால்களில் ஒன்றாக இருந்தாலும், கடந்தாண்டு நாட்டின் பொருளாதார அடைவுநிலை 5.2 விழுக்காடாக பதிவாகியுள்ளது.

இது நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீள்தன்மையுடன் இருப்பதைக் காட்டுவதாக அக்மால் மேலும் விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)