புது டெல்லி, மார்ச் 12 (பெர்னாமா) -- இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்திற்கு, உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கார்லஸ் அல்கராஸ் தேர்வாகினார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அவர் காஸ்பர் ரூட் உடன் விளையாடினார்.
நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட் உடன் மோதிய கார்லஸ் அல்கராஸ் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல், 6-1, 7-6 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டத்தில், அல்கராஸ், பிரிட்டனின் கேமரூன் நோரி உடன் களம் காணவுள்ளார்.
ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில் கேமரூன் நோரி, ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகாடாவுடன் விளையாடினார்.
இந்த ஆட்டத்தை 6-4, 6-2 என்ற நேரடி செட்களில் கைப்பற்றி, இரு முறை வெற்றியாளரான கேமரூன் நோரி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதனிடையே, ஆடவருக்கான மற்றோர் ஆட்டத்தில், ரஷ்யாவின் டெனில் மெட்வடேவும், உபசரனை நாட்டின்அலெக்ஸ் மைக்கேல்சனும் விளையாடினார்,
இந்த ஆட்டத்தில், 6-2, 6-4 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற மெட்வடேவ், சிறந்த எட்டு ஆட்டங்களுக்கு தேர்வாகினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)