Ad Banner
Ad Banner
Ad Banner
 விளையாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் ஃபார்முலா ஒன் ரத்தாகலாம்

14/03/2026 05:44 PM

பஹ்ரேன், 14 மார்ச் (பெர்னாமா) - மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால், அடுத்த மாதம் நடைபெறவிருந்த பஹ்ரேன் மற்றும் சவூதி அரேபியாவின் Formula One Grands Prix கார் பந்தைய போட்டிகள், இவ்வார இறுதிக்குள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பஹ்ரேனுக்கு தேவையான உபகரணங்களை மார்ச் 20-க்குள் அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கி வருவதால், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

Formula One Grands Prix போட்டியில் இடபெற்றுள்ள குழுக்களில், பெரும்பாலான 11 குழுக்கள் பிரிட்டனை பிரநிதிக்கும் நிலையில், ஒளிப்பரப்பு உரிமையை பெற்றுள்ள Sky Sports தொலைக்காட்சி, இந்த போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்து செய்யப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடரும் வேளையில், ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பஹ்ரேனின் Manama உட்பட சில மத்திய கிழக்கு தலைநகரங்களைத் தாக்கியுள்ளன.

அப்பகுதியில் பெரும்பாலான Formula One வீரர்களும் அணியினரும் தங்குவதாக கூறப்படுகிறது

கடந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடக்கப் போட்டிக்குப் பிறகு, இவ்வார இறுதியில் சீனாவில் இரண்டாவது சுற்றுக்கான Formula One கார் பந்தயம் நடைபெறுகிறது.

மத்திய கிழக்கு பந்தயங்கள் எதுவும் மாற்றப்படவோ அல்லது மீண்டும் திட்டமிடப்படவோ வாய்ப்பில்லை என்றும் முன்னதாக கூறப்பட்ட நிலையில்...வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி பஹ்ரேனிலும், ஏப்ரல் 19 ஆம் தேதி சவூதி அரேபியா ஜெட்டாவிலும் Formula One பந்தயம் திட்டமிடப்பட்டிருந்தது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)