Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்தார் ஜப்பானிய பிரதமர் 

20/03/2026 12:06 PM

வாஷிங்டன் டி.சி., 20 மார்ச் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் நடத்திய தாக்குதல்களை ஜப்பானியப் பிரதமர் சானே தகாயிச்சி கண்டித்திருக்கிறார்.

''உண்மையில், அண்டை நாடுகளைத் தாக்குவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவது போன்ற ஈரானின் நடவடிக்கைகளை ஜப்பான் கண்டிக்கிறது. எனது அமைச்சரான வெளியுறவு அமைச்சர் மொட்டேகியும், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் நேரடியாக உரையாடி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஈரானை வலியுறுத்தினார்,'' என்றார் அவர். 

மத்திய கிழக்கில் நிலவும் குழப்பம் காரணமாக உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதியை ஏற்படுத்த டோனல்ட் டிரம்ப்பினால் மட்டுமே இயலும் என்றும் தகாயிச்சி  கூறினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]