Ad Banner
Ad Banner
 பொது

சிறு அளவிலான குப்பையை வீசிய குற்றம்; 78 பேருக்கு சமூக சேவை உத்தரவு பிறப்பிப்பு 

29/03/2026 04:26 PM

புத்ராஜெயா, மார்ச் 29 (பெர்னாமா) -- நேற்று ஆறு மாநிலங்களில் சிறு அளவிலான குப்பையை வீசிய குற்றங்களுக்காக மொத்தம் 78 பேருக்கு பி.கே.எம் எனப்படும் சமூக சேவை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெர்லிஸ், கெடா, கூட்டரசுப் பிரதேசம், பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் இந்த உத்தரவு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஙா கோர் மெங் தெரிவித்தார். 

நடைப்பாதைகள், பொதுச் சாலைகள், வடிகால் அமைப்புகள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் கடலோரப் பகுதிகள் உட்பட விரிவான தூய்மைப் பணிகளில் பி.கே.எம் கவனம் செலுத்துவதாக ஓர் அறிக்கையின் வாயிலாக அவர் கூறினார்.

பொது இடங்களிலும் சாலைகளிலும் குப்பைகளை வீசும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அமலாக்கத் திட்டத்தின் ஒரு பகுதி பி.கே.எம் என்று அவர் குறிப்பிட்டார்.

சிறிய அளவிலான குப்பையை வீசும் பழக்கத்தை தடுக்காவிட்டால், அது மக்களின் வசதியைப் பாதிப்பதோடு நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்று ஙா கூறினார்.

மேலும், சிகரெட் துண்டுகள், TISU எனப்படும் மெல்லிழைத்தாள் மற்றும் குளிர்பான டின்களை பொது இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு நாட்டின் நற்பெயரும் பாதிக்கப்படுகிறது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)