Ad Banner
Ad Banner
 உலகம்

தெஹ்ரானின் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி நிலையம் மீது தாக்குதல்

30/03/2026 05:13 PM

தெஹ்ரான், மார்ச் 30 (பெர்னாமா) -- தெஹ்ரானில் உள்ள மெஹ்ரபாட் அனைத்துலக விமான நிலையம் வடமேற்கு நகரமான தஃப்ரிசில் உள்ள ஒரு பெட்ரோலிய வேதிப்பொருட்கள் உற்பத்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தின.

தலைநகர் முழுவதும் சில இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

நகரின் தெற்குப் பகுதியில் உள்ள தேசிய வங்கியின் ஒரு கிளையும் அட்டைப்பெட்டி தொழிற்சாலை ஒன்றும் தாக்கப்பட்டன.

இதனிடையே, தெஹ்ரானின் வடக்கில் உள்ள குடியிருப்புப் பகுதியும் தாக்கப்பட்டதில், சிலர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் நெருக்கடி நிர்வகிப்புத் தலைவர் மாஜிட் ஃபார்ஷி  தெரிவித்தார்.

நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தாக்குதலைத் தொடர்ந்து அபாயகரமான அல்லது நச்சுப் பொருட்கள் எதுவும் கசியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)