Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பெற்றோர் பராமரிப்பு சட்ட மசோதா; அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

07/05/2026 05:20 PM

கோலாலம்பூர், 07 மே (பெர்னாமா) --  பெற்றோர்களைப் பாதுக்காக்கும் சமூக பொறுப்புகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிச் செய்யும் வகையில் பெற்றோர் பராமரிப்பு சட்ட மசோதாவை வரைவு செய்வதற்கான பரிந்துரையை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

பெற்றோர்களைப் பராமரிப்பதில் பிள்ளைகளுக்கு இருக்கும் பொறுப்புகள் தொடர்பான சட்டங்களை பல நாடுகள் அமல்படுத்தியிருக்கும் நிலையில், மலேசியாவில் அது இன்னும் ஆய்வு நிலையிலேயே இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

"நான் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு அமைச்சிடம் கேட்டேன் இப்போது தொடங்கி ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்றுவது குறித்த ஒரு முன்மொழிவு அறிக்கையைச் சமர்ப்பிக்க. அவை கொள்கை ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்'', என்றார் அவர்.

இன்று நடைபெற்ற 2026-2030 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக கொள்கை செயல் திட்டம், PTDSN-ஐ தொடக்கி வைத்த பின்னர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் நாடு அதிவேகமாக முன்னேறினாலும், குடும்பங்கள், மத நம்பிக்கைகள் ஆகியவைப் பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதற்கு இந்த பரிந்துரை அவசியம் என்று சாஹிட் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)