செபு, மே 08 (பெர்னாமா) -- விரைவான ஒருங்கிணைப்பு மற்றும் அவசரகால பதில் நடவடிக்கை முயற்சிகளுக்கு வழிவகுக்கும் வகையில், நெருக்கடிகளின் போது உணவு உத்தரவாதத்திற்கான வட்டார தயார்நிலை வழிமுறை உருவாக்குவது குறித்த உடனடி ஆய்வு ஒன்றை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்துள்ளார்.
எரிசக்தி விநியோக நெருக்கடி, உணவு விநியோகத் தடையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் எச்சரித்தார்.
''இடையூறுகள் தொடர்ந்தால், ஆசியான் அமைப்பு அடுத்த ஆண்டு வரையிலும் குறைந்த விளைச்சல் மற்றும் நீடித்த உணவுப் பற்றாக்குறை ஆகிய அபாயங்களை எதிர்கொள்ளும். எனவே, உணவுப் பாதுகாப்பு ஒரு வட்டார வியூக முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும்., '' என்றார் அவர்.
பிலிப்பைன்ஸ், செபுவில் இன்று நடைபெற்ற 48-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் உரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தியின் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், இது வட்டாரம் முழுவதும் விநியோகப் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.
ஆசியான் பிளஸ் 3 அவசரகால அரிசி கையிருப்பு வழிமுறை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், உரம் உத்தரவாதத்தையும் உள்ளடக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்த பங்காளி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)