மொடெனா, 17 மே (பெர்னாமா) -- இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள மொடெனா நகரில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் எண்மர் காயமடைந்தனர்.
மேலும், அவர்களின் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான ஆடவர், கண்மூடித்தனமாக செலுத்திய வாகனம் பாதசாரிகள் கடக்கும் பகுதிகளுள் நுழைந்து பலருக்கு காயம் விளைவித்ததோடு, அருகிலுள்ள ஒரு வணிக வளாகத்தையும் மோதியதாக மொடெனா மேயர் மசிமோ மெஸ்ஸெட்டி தெரிவித்தார்
அந்த அசம்பாவிதத்தை தடுக்க முயன்ற பாதசாரி ஒருவரை சம்பந்தப்பட்ட ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி கத்தியால் குத்தியதாக அதனை நேரில் கண்ட ஒருவர் கூறினார்.
பின்னர், அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன், போலீஸ் தலைமையகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மசிமோ மெஸ்ஸெட்டி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)