உலகம்

வன்முறைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

28/05/2022 08:00 PM

ஹொஸ்டன், 28 மே (பெர்னாமா) -- அமெரிக்காவின் ஹொஸ்டனில், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற என்.ஆர்.ஏ எனப்படும் தேசிய ரைப்பில் துப்பாக்கி சங்கத்தின் வருடாந்திர மாநாட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி இருக்கின்றனர். 

சில தினங்களுக்கு முன்னர், அமெரிக்கா டெக்சஸ் மாநிலத்தில்,  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஆடவன் ஒருவனால், தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் பலியானதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

1999-ஆம் ஆண்டு கொலொராடாவின் கொலைம்பின் உயர்நிலைப் பள்ளியில் அன்று துப்பாக்கிச் சூடு நடந்ததைத் தொடர்ந்து, NRA சங்கம் இந்த துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பல முயற்சிகளை மேறற்கொண்டு வருகிறது. 

50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் இச்சங்கத்தின் மாநாடு,  கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக, நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அண்மையில் நிகழ்ந்த  துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள்,மற்றும்  பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள், மாநாட்டிற்கு வெளியே எதிர்ப்பு தெரிவித்தனர்.

அச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இத்துயரச் சம்பவத்தை ஒட்டி, அமெரிக்க தேசியக் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)