GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
உலகம்

குற்றச்செயல்கள் நடவடிக்கையைத் தடுக்க புதிய திட்டம்

25/11/2022 08:05 PM

ஹொண்டுரஸ், 25 நவம்பர் (பெர்னாமா) -- ஹொண்டுரசில், அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் குழுக்களின் மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையைத் தடுக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது.

அத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர், அந்நாட்டு அதிபர் சியோமாரா கேஸ்ட்ரோ அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

கேஸ்ட்ரோ இந்த புதிய திட்டம், குற்றச்செயல் குழுக்கள் அதிகமுள்ள பகுதிகளில் சில அரசியலமைப்பு உரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்ய வழிவகுக்கும் சாத்தியம் உள்ளது.

அதேவேளையில், அவசரகால நிலையை முன்னிட்டு 20,000 போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு, பணமோசடிக்கு எதிராக சாலையில் புதிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை முதல் புதிய பாதுகாப்பு திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அரசியலமைப்பு உரிமைகளை தற்காலிகமாக நிறுத்த காங்கிரசின் அனுமதி வேண்டும்.

அந்நாட்டில், கடந்த சில மாதங்களாக மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கை மோசமாகி வந்ததால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தகர்களும், பேருந்து, டாக்சி மற்றும் வாகன ஓட்டுநட்களும் நெருக்குதல் அளித்து வந்ததைத் தொடர்ந்து இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)