Ad Banner
 விளையாட்டு

ஆஸ்திரேலிய பொது டென்னிஸ்; அடுத்து சுற்றுக்கு முன்னேறினார் அல்கராஸ்

19/01/2026 05:46 PM

ஆஸ்திரேலிய, ஜனவரி 19 (பெர்னாமா) -- ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியயில் மெல்பனில் நேற்று தொடக்கம் கண்ட இந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிப் பெற்று உலகின் முதல்நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.

உபசரணை நாட்டின் ஆடம் வால்டன்-னைத் தோற்கடித்து அல்கராஸ் அடுத்தச் சுற்றில் கால் வைத்தார்.

ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாம் போட்டியில் கார்லோஸ் அல்கராஸ் இதுவரை காலிறுதி சுற்றை கடந்ததில்லை.

எனவே, இந்த டென்னிஸ் போட்டியில் வெற்றிப் பெறும் முதல் இளம் ஆட்டக்காரர் எனும் பட்டத்தை வெல்லும் இலக்கில் களமிறங்கி இருக்கும் அவர் 6-3, 7-6, 6-2 என்ற புள்ளிகளில் முதல் வெற்றியுடன் தமது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அல்கராஸ் இரு விண்பிள்டன் இரு பிரான்ஸ் மற்றும் இரு அமெரிக்க பொது டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ளார்.

அடுத்த சுற்றில் அவர் ஜெர்மனியின் யானிக் ஹான்ஃப்மேன் உடன் போட்டியிடுவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)