GE15 NEWS |
புத்ராஜெயா, 09 டிசம்பர் (பெர்னாமா) -- மலேசிய குடிநுழைவுத் துறையின் கீழ் 285 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவிருப்பதாக டத்தோ ஶ்ரீ சைபுடின் தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறையில் ஆள்பலத்தை அதிகரிக்கும் நோக்கில் தமது அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் அத்துறையில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் மூலம், தற்போதுள்ள ஊழியர்கள் எதிர்காலத்தில் பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சியை அனுபவிக்க முடியும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.
"இதை மறுசீரமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே ஒரு செயல்முறையை அடையாளம் கண்டுள்ளன. மேலும் தலைமை செயலாளர் உதவியுடன் பொதுச் சேவைத் துறை உடனான கலந்துரையாடல் தொடரும். அது நல்ல பலன்களை வழங்க முடியும் என்று நம்புகிறோம். ஏனெனில் இது குடிநுழைவுத் துறை ஊழியர்களுக்குச் சிறந்த உத்தரவாதத்தையும் அதிக ஊக்கத்தையும் அளிக்கும்," என்று சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
இதுவரை குடி நுழைவுத் துறையின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் 14,142 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை