பொது

சித்ரவதைச் சம்பவம் குறித்து புகாரளிக்க பொது மக்கள் தைரியமாக முன்வர வேண்டும்

18/04/2024 08:23 PM

கோலாலம்பூர், 18 ஏப்ரல் (பெர்னாமா) -- எந்தவொரு சித்ரவதைச் சம்பவம் குறித்தும் புகாரளிக்க பொது மக்கள் தைரியமாக முன்வர வேண்டும்.

மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு நிர்வகிக்கும் 15999 என்ற 'Talian Kasih' தொடர்பு எண் மூலம் இச்சம்பவம் குறித்து நேரடியாக தொடர்புக் கொள்ளலாம் என்று அதன் அமைச்சர் நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.

''15999 என்ற தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் புகாரளிக்க பொது மக்களுக்கு தைரியம் வேண்டும். மேலும், புகாரளிப்பவர்கள் தங்களின் பெயரை வெளியிட வேண்டாம். இங்கு முக்கியமானது என்னவென்றால் மக்கள் புகாரளிக்க வேண்டும். அதன்வழி, நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்,'' என்றார் அவர்.

இன்று, மலேசிய சமூக கழகம், மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்திருந்த 'Kasih Semurni Usaha KPWKM @ Antigangguan Seksual' என்ற கருத்தரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த திங்கட்கிழமை, தமது தந்தையின் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்கையில் அவர் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)