பொது

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பேருந்தை ஓட்டியவர் கைது

02/07/2024 07:37 PM

கோம்பாக், 02 ஜூலை (பெர்னாமா) --ஓட்டுநர் உரிமம் இல்லாமல், பயணிகள் நிறைந்த சுற்றுலாப் பேருந்தை ஓட்டிச் சென்றது.

சிலாங்கூர், கோம்பாக்கில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றுலா மற்றும் விரைவு பேருந்துகளின் ஒருங்கிணைந்த சோதனையின் வழி இவ்விவகாரம் அம்பலமானது.

இன்று அதிகாலை மணி ஆறு தொடங்கி, கோம்பாக் டோல் சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களை உட்படுத்திய சாலைத் தடுப்பு நடவடிக்கையில், சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே ஈடுபட்டது.

சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற ஒவ்வொரு பேருந்தும் VAN-உம், அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பி.எஸ்.வி எனப்படும் பொது போக்குவரத்து வாகன உரிமம் மற்றும் வாகன பெர்மிட் ஆகியவற்றை முறையாகக் கொண்டிருப்பது சோதிக்கப்பட்டது.

ஜே.பி.ஜே உறுப்பினர்கள் அந்த அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அவ்வாகனங்களை கோம்பாக் அமலாக்க நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர்.

அந்நிலையத்தில், ஓட்டுநர்களின் முந்தைய போக்குவரத்து சம்மன்கள், போதைப் பொருளை உட்கொண்டுள்ளனரா என்பதை உறுதிபடுத்த சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் மற்றும் பி.எஸ்.வி உரிமம் இல்லாமல் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு சிலாங்கூரிலிருந்து, குவாந்தானிற்கு செல்ல முற்பட்ட ஆடவர் ஒருவர் இச்சோதனையில் கைது செய்யப்பட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502