2025 ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்த மலேசியா தயார்

10/07/2024 04:13 PM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் 2025-ஆம் ஆண்டு ஆசியான் உச்ச நிலை மாநாட்டை ஏற்று நடத்த மலேசியா தயாராக உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் ஆசியான் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் மொத்தம் 257 உயர்மட்டக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

இன்று மக்களவையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் தயார்நிலை குறித்து கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி எழுப்பிய கேள்விக்கு முஹமட் ஹசான் அவ்வாறு பதிலளித்தார்.

தயார்நிலை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய அமைச்சர்களை உள்ளடக்கிய செயற்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)