சிறப்புச் செய்தி

இந்திய சமூகத்தின் நலன், முன்னேற்றத்தில் பிரதமர் எப்போதும் முன்னுரிமை - டத்தோ ரமணன் புகழாரம்

10/07/2024 05:57 PM

கோலாலம்பூர், 10 ஜூலை (பெர்னாமா) -- நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களையவும் அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்வதிலும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதும் தொடர்ந்து உறுதி கொண்டுள்ளார்.

மேலும், இந்தியர்கள் தொடர்பான அனைத்து திட்டங்களின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பிரதமர் முன்னுரிமை அளிப்பதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய சமூகம் சார்ந்த அனைத்து திட்டங்களும் வலுப்படுத்தப்பட்டு கூடுதல் மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

''SPUMI Goes Big Program'' திட்டத்தின் வழியாக கூடுதலாக மூன்று கோடி ரிங்கிட்டும், அமானா இக்தியார் மூலம் இந்தியப் பெண்களுக்கு கூடுதலாக ஐந்து கோடி ரிங்கிட்டும், பேங்க் ரக்யாட் வழி அண்மையில் BRIEF-i  திட்டத்திற்கு ஐந்து கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதனால்தான் ''SPUMI Goes Big Program'' திட்டத்தின் வழியாக கூடுதலாக மூன்று கோடி ரிங்கிட்டும், அமானா இக்தியார் மூலம், மலேசியாவின் 'PENN' எனப்படும் இந்தியப் பெண்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக ஐந்து கோடி ரிங்கிட்டும், Bank Rakyat  மூலம் அண்மையில் BRIEF-i  திட்டத்திற்கு, ஐந்து கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஒட்டுமொத்தமான இந்திய சமூகத்திற்காக, கடந்த நான்கே மாதங்களில், பிரதமரின் தலைமையிலான மடானி அரசாங்கம் 13 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையும் அவர் கோடி காட்டினார்.

"கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை தெக்குனின் ஸ்பூமி திட்டத்திற்கு கூடுதலாக எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால், தற்போது ஸ்பூமிக்கு மொத்தமாக அரசாங்கம் ஆறு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது," என்றார் அவர்.

கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை தெக்குனின் ஸ்பூமி திட்டத்திற்கு கூடுதலாக எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. 

ஆனால் தற்போது ஸ்பூமிக்கு மொத்தமாக அரசாங்கம் ஆறு கோடி ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாக ரமணன் தெரிவித்தார்.

இதற்கு முன்னர்  PENN திட்டத்திற்கு இரண்டு கோடி ரிங்கிட் வழங்கப்பட்டு வந்த வேளையில், தற்போது மடானி அரசாங்கத்தின் கீழ் மேலும் ஐந்து கோடி ரிங்கிட் அதிகரிக்கப்பட்டு ஏழு கோடி ரிங்கிட்டாக உள்ளது, என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

முந்தைய அரசாங்கத்தைக் காட்டிலும் ஒருமைப்பாட்டு அரசாங்கமும் அன்வாருமே, நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு மிகப்பெரிய ஒதுக்கீட்டை வழங்கி அக்கரைச் செலுத்துவதாக ரமணன் மேலும் தெரிவித்தார்.  

ஆகவே, இந்திய சமூகம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)