பொது

6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீட்டித்திருக்கும் முடிவு சட்ட அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது

11/07/2024 06:10 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களை, மக்கள் பிரதிநிதிகளாக நீட்டித்திருக்கும் முடிவை மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் அரசியலமைப்பு மற்றும் சட்ட மதிப்பாய்வின் அடிப்படையிலேயே மேற்கொண்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட சட்டத்தை, ஜொஹாரி ஒட்டுமொத்தமாக வாசித்து மதிப்பாய்வு செய்துள்ளார்.

அதை பெர்சத்து கட்சி தலைமைத்துவம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட அச்சட்டம் குறித்த விவாதத்தின்போது, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பியம் தானாகவே பறிபோக வேண்டும் என்று அப்போதைய எதிர்கட்சியான தங்கள் தரப்பு கூறியபோது பெர்சத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அன்வார் சுட்டிக் காட்டினார்.

இன்று, கோலாலம்பூரில், 2024ஆம் ஆண்டு உலக மடானி கருத்தரங்கில் உரையாற்றியப் பின்னர் பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அது குறித்து மேலும் விவரித்த அவர், தாம் அக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அதற்கு அப்போதைய நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் துன் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாஃபார், நம்பிக்கை கூட்டணியைப் பிரதிநிதித்து டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்l மற்றும் அந்தோணி லோக் உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டது தமக்குத் தெரியும் என்று கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை