பொது

புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதில் 3 முக்கிய அம்சங்களில் நிதிக் கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும்

11/07/2024 06:17 PM

கோலாலம்பூர், 11 ஜூலை (பெர்னாமா) -- புதிய தொழில்நுட்பம் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ-ஐ அமல்படுத்துவதில், திறன் மேம்பாடு மற்றும் மறுதிறனை உள்ளடக்கி உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் ஆள்பலம் போன்ற மூன்று முக்கிய அம்சங்களில் நிதி கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அந்த மூன்று முக்கிய அம்சங்களின் வழி, ஏ.ஐ சவால்களை எதிர்கொள்வதற்கான சிறந்த தீர்வை தொழில்துறையினர் அடையாளம் காணலாம் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இன்று, கோலாலம்பூரில், 2024ஆம் ஆண்டு மலேசிய வங்கிகளுக்கான மாநாட்டில் உரையாற்றும்போது கோபிந்த் சிங் அவ்வாறு தெரிவித்தார்.

இலக்கவியல் பொருளாதாரம் நாட்டிற்கு முக்கியமானது என்பதையும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தி, கேடிஎன்கே-விற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கவிருக்கிறது என்பதையும் பொது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)