அரசியல்

கட்சித் தாவல் எதிர்ப்புச் சட்டத்தில் இடைவெளி; திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் எண்ணம் 

12/07/2024 07:32 PM

புத்ராஜெயா, 12 ஜூலை (பெர்னாமா) -- கட்சித் தாவல் எதிர்ப்பு சட்டத்தில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான விவாதங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.

2022-ஆம் ஆண்டு நம்பிக்கைக் கூட்டணி எதிர்கட்சியாக இருந்தபோது தரப்பு முன்வைத்த பரிந்துரையை அப்போதைய அரசாங்கம் நிராகரித்ததாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று, புத்ராஜெயா,  பிரிசின்ட் 9-இல் உள்ள அன் - நஜா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் அவ்வாறு கூறினார்.

அன்வாருக்கு ஆதரவு தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளை காலி செய்யப் போவதில்லை என்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் முடிவெடுத்துள்ளார்.

அம்முடிவிற்கு பிரதமரும் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியலைப்பு மற்றும் சட்டத்தின் அடிப்படையிலானது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)