விளையாட்டு

கோப்பா: இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா & கொலம்பியா

14/07/2024 07:25 PM

வட கரோலினா, 14 ஜூலை (பெர்னாமா) -- இறுதி ஆட்டத்திற்கு அர்ஜென்டினாவும் கொலம்பியாவும் தேர்வாகியிருக்கும் நிலையில் நேற்று மூன்றாம் நிலை வெற்றியாளருக்கான ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டம் 2-2 என்று சமநிலை கண்டதால் பினால்டி வாய்ப்பின் வழி உருகுவே கனடாவை தோற்கடித்தது.

ஆட்டத்தின் எட்டாம் நிமிடத்தில் முதல் கோலை அடித்து உருகுவே முன்னணி வகிக்க தொடங்கியது.

அதன் பின்னர், 14 நிமிடங்கள் கழித்து இஸ்மாயில் கோன் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.

முதல் பாதி ஆட்டம் 1-1 என்று சமநிலையில் முடிவுற, 80-வது நிமிடத்தில் கனடா இரண்டாவது கோலை அடித்து உருகுவே அணியை பின்னுக்குத் தள்ளியது.

இருப்பினும், நட்சத்திர ஆட்டக்காரர் லூயிஸ் சுரேஸ் இரண்டாவது கோலை அடித்து சமன் செய்ததால், உருகுவே இவ்வாட்டத்தை பினால்டி வரை இட்டுச் சென்றது.

பினால்டியில், 4-3 என்ற கோல் கணக்கில், உருகுவே வெற்றி பெற்று மூன்றாம் நிலையை கைப்பற்றியது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)