பொது

ஷரியா: நீதிபதிகளை உள்ளடக்கிய ஊதியச் சட்டத்தை உருவாக்க பரிசீலனை

15/07/2024 04:53 PM

புத்ராஜெயா, 15 ஜூலை (பெர்னாமா) -- ஷரியா நீதிபதிகளை உள்ளடக்கிய ஊதியச் சட்டத்தை உருவாக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

ஷரியா நீதிமன்றங்களை கௌரவிப்பதோடு, ஷரியா நீதித்துறை சேவை திட்டத்திற்கும் சிவில் சேவைக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டதாக
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஷரியா நீதிபதிகளின் அந்தஸ்தை குறைத்து மதிப்பிடும் நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், அச்சட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கு ஷரியா நீதிபதிகளுக்கு வலிமையையும் தைரியத்தையும் வழங்குவதற்கும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

இன்று, புத்ராஜெயாவில், மலேசிய ஷரியா சட்டம் மற்றும் நீதித்துறையை ஆதரிக்கும் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றும்போது அன்வார் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)