பொது

சமூக ஊடகங்களில் குற்றவியல் அம்சங்களிலான பதிவேற்றங்களைச் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை

15/07/2024 05:08 PM

புத்ராஜெயா, 15 ஜூலை (பெர்னாமா) -- வாட்ஸ்அப் செயலி உட்பட அனைத்து சமூக ஊடகங்களில், ஆபாசம், குற்றவியல் மற்றும் தீவிரவாத அம்சங்களிலான பதிவேற்றங்களைச் செய்யும் நபர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கொலை உட்பட நன்னெறியற்ற மற்றும் குற்றவியல் அம்சங்களிலான மிரட்டல்கள் பரவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

''ஓரிரு நாள்களுக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பை கொலை செய்யும் முயற்சி நடந்தது. அது குறித்து நன்னெறியற்ற மற்றும் குற்றவியல் அம்சங்களிலான மிரட்டல்கள் வாட்ஸ்அப்பில் பரவி வருவதை கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். "அங்கு மட்டும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கக்கூடாது" என்று வன்முறை அம்சத்திலான கருத்தை அவர்கள் பதிவிடுகின்றனர். கொலை உட்பட குற்றவியல் அம்சங்களிலான மிரட்டல்கள் நமது பிரதமருக்கு விடுக்கப்படுகின்றன. கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், இது மிகத் தீவிரமான ஒன்று,'' என்றார் ஃபஹ்மி.

எந்தவொரு சமூக வலைத்தளத்தையும் தடை செய்ய அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றாலும், இணையப் பகடிவதை, இணைய சூதாட்டம் உட்பட ஆபாச பதிவேற்றங்களைக் களைவதில் அவற்றின் வழிநடத்துனர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
 

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை