பொது

கூடுதல் செலவுகளின்றி 'BUDI MADANI' அமைப்பு மேம்படுத்தப்பட்டது

15/07/2024 05:15 PM

கோலாலம்பூர், 15 ஜூலை (பெர்னாமா) -- எந்தவொரு கூடுதல் செலவுகள் இன்றி 'BUDI MADANI' அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

 'BUDI MADANI' அகப்பக்கமும், தனியார் ஆலோசகர்களின் சேவையைப் பெறாமல் அரசாங்க அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

''எனவே, தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதில் திறந்த குத்தகை போன்ற பிரச்சினைகள் எழவில்லை,'' என்றார் அவர்.

திங்கட்கிழமை மக்களவையில், லிபாரான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹாய்மி நாசிர் எழுப்பிய கேள்விக்கு, லிம் ஹுய் யிங் அவ்வாறு பதிலளித்தார்.

 'BUDI MADANI' அமைப்பை உருவாக்குவதற்கான செலவு மற்றும் திறந்த குத்தகை மூலம் அது மேம்படுத்தப்பட்டதா என்று சுஹாய்மி கேள்வி எழுப்பினார்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே உதவி தொகை வழங்குவதற்கான ஒரு தளமாக 'BUDI MADANI' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)