பொது

கடலடி குழாய்களை பழுதுபார்க்க கூடுதல் நிதி வழங்க முயற்சி

15/07/2024 06:20 PM

கோலாலம்பூர், 15 ஜூலை (பெர்னாமா) -- தானா பெசாரில் இருந்து லங்காவி தீவு வரை, கடலுக்கு அடியில் உள்ள குழாய்களைப் பழுதுபார்க்கும் திட்டத்திற்கு, கூடுதலாக ஒரு கோடி ரிங்கிட்டை வழங்குவதற்கு எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாக ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், இத்திட்டத்திற்கான செலவை ஈடுகட்ட கூடுதல் நிதி உதவி பயன்படுத்தப்படும் என்று அதன் துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமாட் நாசிர் தெரிவித்தார்.

''இழுவை படகுகள் காரணமாக கசிவு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் நீண்ட கால அடிப்படையில், ஐந்து கோடி ரிங்கிட் போதாது என்று நான் கூறினேன். அதனால் தான் அமைச்சு PAB மூலம் மூலம் கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்க விரும்புகிறது,'' என்றார் அவர்.

லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் சுஹாய்மி அப்துல்லா எழுப்பியக் கேள்விக்கு அக்மால் நஸ்ருல்லா அவ்வாறு பதிலளித்தார்.

பெர்லிஸ், சுங்கை பாருவில் இருந்து லங்காவி வரை, கடலுக்கு அடியில் உள்ள 35 கிலோ மீட்டர் நீலமுள்ள குழாயில், 7 கிலோ மீட்டார் நீலமுள்ள குழாய் பழுதடைந்திருப்பதே லங்காவி தீவில் நீர் தட்டுபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)