பொது

டிவெட்டில் தனியார் துறை நிர்வகிப்புத் திட்டங்களில் பங்கேற்க வெளிநாட்டு மாணவர்களுக்கு அழைப்பு

17/08/2024 06:11 PM

கோலாலம்பூர், 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- டிவெட் எனப்படும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில் பயிற்சியில் தனியார் துறையின் நிர்வகிப்பிலான திட்டங்களில் பங்கேற்க வெளிநாட்டு மாணவர்களை மலேசிய வரவேற்கிறது.

உள்நாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் சம்பந்தப்பட்ட அம்மாணவர்களால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்ய அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''இதற்கு காரணம் 20 விழுக்காட்டு கல்விமுறை மட்டுமே வகுப்பறையில் மேற்கொள்ளப்படுகிறது. எஞ்சிய 80 விழுக்காடு ஆய்வகம் அல்லது பணியிடங்கள் அல்லது மாணவர்களைக் கவரக்கூடிய இதர இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்க ஆதரவிலான டிவெட் கழகங்களில் உள்நாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்புகளைப் (வெளிநாட்டு மாணவர்கள்) பறிக்கப்படாமல் இருக்க தனியார் துறை நிர்வகிப்பிலான டிவெட்டில் பங்கேற்ப வெளிநாட்டு மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்,'' என்றார் அவர். 

இன்று, கோலாலம்பூரில் International Young Future Leaders Summit (Ifuture) நிகழ்ச்சியில் உரையாற்றியப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]