Ad Banner
 பொது

ஹன்னாவிற்கு 250,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க மூசா ஹசானுக்கு உத்தரவு

13/01/2026 05:50 PM

புத்ராஜெயா, ஜனவரி 13 (பெர்னாமா) -- முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸுக்கு எதிராக தாக்கல் செய்த 19 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான வழக்கை மீண்டும் தொடங்குவதற்கான மேல்முறையீட்டில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று தோல்வி கண்டார்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது பதவியில் தவறான நடத்தை செயல்முறை துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியம் தொடர்பான குற்றவியல் வழக்கு தொடங்கப்படாததால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை டத்தோ ரவீந்திரன் என். பரமகுரு தலைமையிலான மூன்று மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு ஏற்றுக் கொண்டது.

டத்தோ வோங் கியான் கியோங் மற்றும் டத்தோ நட்ஜரின் வோக் நோர்டின் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் தேசிய சட்டத்தில் செயல்முறை துஷ்பிரயோகம் என்ற தவறு இல்லை என்பதை தமது தரப்பு கண்டறிந்ததாக ரவீந்திரன் தெரிவித்தார்.

நஜிப்பின் மேல்முறையீட்டை நீதிமன்றம் 12,000 ரிங்கிட் செலவுடன் தள்ளுபடி செய்தது.

தோமி தோமஸு மீதான தமது வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2022-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி நஜீப் மேல்முறையீடு செய்தார்.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் 1MDB வழக்கு தொடர்பில் தோமி தோமஸு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி முன்னாள் பெகான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜீப் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)