பொது

இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சரியான தடத்தில் பயணிக்கிறது

17/08/2024 06:17 PM

ஜோகூர் பாரு, 17 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பேங்க் நெகாரா மலேசியா நேற்று அறிவித்திருக்கும் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜி.டி.பி வளர்ச்சி, மலேசியா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான சரியான தடத்தில் செல்வதை நிரூபிப்பதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறினார்.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 5.9 விழுக்காடு வளர்ச்சி, முதல் காலாண்டில் 4.2-ஆக இருந்தாலும் இது எதிர்பாராத வளர்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று, ஜோகூர் பாரு, யூ.டி.எம் சதுக்கத்தில் நடைபெற்ற தென் மண்டல மக்கள் மடானி திட்டத்தின் ‘Ask Minister Anything’ எனும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரஃபிசி அவ்வாறு தெரிவித்தார்.

இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி சரியான தடத்தில் பயணிக்கிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]