அரசியல்

நெங்கிரி வெற்றி; மலாய்க்காரர்களின் ஆதரவு மீண்டும் அம்னோ வசம் திரும்புகிறது 

18/08/2024 04:30 PM

குவா மூசாங்,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நெங்கிரி சட்டமன்றத்தில் தேசிய முன்னணியின் வெற்றி மலாய்க்காரர்களின் ஆதரவு அம்னோவுக்கு மீண்டும் திரும்பியிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அதேவேளையில், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு அது மேலும் வலு சேர்த்துள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ரஃப் வாஜ்டி டுசுகி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாஸ் ஆதிக்கம் செலுத்திய நெங்கிரியில் இளைஞர்களின் ஆதரவு தேசிய முன்னணி வசம் திரும்பி இருப்பது அக்கட்சிக்கு கிடைத்த எதிர்பாராத வெற்றி என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருமைப்பாட்டு அரசாங்கத்துக்கு மலாய் சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் தேசிய முன்னணி குறிப்பாக அம்னோ முக்கிய பங்காற்றும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இதற்கு முன்னர் கூறியிருந்ததற்கு ஏற்ப இந்த வெற்றி அமைந்துள்ளதாக டத்தோ டாக்டர் அஸ்ரஃப் கோடிகாட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)