உலகம்

தாய்லாந்தின் 31ஆவது பிரதமராக பேடோங்டார்ன் சினவத்ரா நியமனம்

18/08/2024 05:37 PM

பேங்காக்,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தாய்லாந்தின் 31ஆவது பிரதமராக பேடோங்டார்ன் சினவத்ராவை அந்நாட்டு மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் நியமித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர், இன்று பியு தாய் தலைமையகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் 37 வயதுடைய பேடோங்டார்ன், வஜிரலோங்கோர்னின் எழுத்துப்பூர்வ அரச கட்டளையைப் பெற்றார்.

31ஆவது பிரதமராகப் பதவியேற்ற பேடோங்டார்ன் சினவத்ரா அரச கட்டளையை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக வஜிரலோங்கோர்னின்  உருவப்படத்திற்கு  மரியாதை செலுத்தினார்.

இன்று காலை 8.20 மணியளவில் தமது தந்தை தக்சின் ஷினவத்ரா மற்றும் தாய்லாந்தின் இடைக்கால அமைச்சரவை உறுப்பினர்களுடன் பேடோங்டார்ன் இவ்விழாவிற்கு வருகைப் புரிந்திருந்தார். 

புதன்கிழமை அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்ரேத்தா தவிசினை வீழ்த்தி பதவியேற்கும் நாட்டின் இளம் பிரதமர் பேடோங்டார்ன் ஆவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)