விளையாட்டு

அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது சுக்மா

18/08/2024 05:58 PM

கூச்சிங்,18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 2024 மலேசிய விளையாட்டுப் போட்டி சுக்மா நேற்றிரவு சரவாக் அரங்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவை, உபசரணை மாநிலமான சரவாக், 40 ஆயிரம் பேர் முன்னிலையில் மிக கோலாகலமாகத் தொடங்கியது.

ரவாக் ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனாய்டி  துவாங்கு ஜஃபார் , மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபேங், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

SUKMA Sarawak Kesukanan Dalam Perpaduan என்ற கருப்பொருளோடு தொடங்கிய பாடல், விழாவின் தொடக்க அங்கமாக அமைந்தது.

பின்னர், 15 போட்டிக் குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதில், 2022 ஆம் ஆண்டு கோலாலம்பூரில், நடைபெற்ற போட்டியில் வெற்றியாளரான ஜோகூர் முதலில் வந்த வேளையில், உபுசரணை மாநிலமான சரவாக்கின் வருகையோடு அணிவகுப்பு முடிந்தது.

நாட்டின் பிரபல பாடகர்களான ஃபைசால் தாஹிர், ஜெக்லின் விக்டர் மற்றும் மர்ஷா மிலான் ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா இன்னும் மெறுகேறியது.

நாட்டின் முக்குளிப்பு வீராங்னை டத்தோ பண்டேலா ரினோங் சுக்மா தீபம் ஏற்றியதன்வழி, சுக்மா 2024 விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாக தொடங்கம் கண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502