பொது

இஸ்திகோமாவின் குடும்பத்திற்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் - ஃபட்லினா

20/08/2024 03:21 PM

பாசிர் மாஸ், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த இஸ்திகோமா அஹ்மாட் ரோசியின் குடும்பத்திற்கு குறிப்பாக இன்னும் பள்ளியில் பயின்று வரும் அவரின் பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட அக்குடும்பத்திற்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் கடப்பாட்டை தமது தரப்பு கொண்டிருப்பதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

''கல்வி அமைச்சை பிரதிநிதித்து இந்தச் சந்தர்ப்பத்தில் ஆழ்ந்த அனுதாபங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இக்குடும்பத்திற்கான நன்கொடையை அளித்துள்ளோம். துன் ஹுசேன் ஒன் ஆசிரியர் அறக்கட்டளை, YGTHO-இன் பங்களிப்பும் அதில் அடங்கும்,'' என்றார் அவர். 

இன்று, கிளாந்தான், பாசிர் மாஸ், கம்போங் குபாங் பாடாக்கில் உள்ள இஸ்திகோமா வீட்டிற்குச் சென்று அவரின் குடும்பத்தைச் சந்தித்தப் பின்னர் ஃபட்லினா செய்தியாளர்களிடம் பேசினார்.

அதோடு, அக்குடும்பத்திற்காக ஓய்வூதியம் உட்பட அப்பிள்ளைகளின் சமூக நலனிலும் தமது தரப்பு கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]