உலகம்

உலகின் மிக வயது முதிர்ந்த மரியா காலமானார்

21/08/2024 05:46 PM

ஸ்பெய்ன், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- உலகின் மிக வயது முதிர்ந்த மூதாட்டியான ஸ்பெயினைச் சேர்ந்த மரியா பிரென்யாஸ் மொரேரா தமது 117-ஆவது அகவையில் காலமானார்.

அவரது குடும்பம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றலாகி வந்துபோது, 1907-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி அமெரிக்கா, SAN FRANCISCO-வில் பிரென்யாஸ் பிறந்தார்.

118 வயதில் FRANCE-ஐ சேர்ந்த LUCILE RANDON இறந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கின்னஸ் உலக சாதனையில் உலகின் மிக வயதான நபராக பிரென்யாஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளாக CATALONIA-வின் வடகிழக்கு பகுதியில் உள்ள OLAT நகரில் உள்ள SANTA MARIA DEL TURA முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.

பிரென்யாசின் மரணத்தைத் தொடர்ந்து, உலகில் வாழும் மிகவும் வயதான நபர் என்ற பெருமை ஜப்பானைச் சேர்ந்த TOMIKO ITOOKA-ஐ சேரும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த முதுமையியல் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

1908-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி பிறந்த TOMIKOவிற்கு 116 வயதாகிறது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)