உலகம்

மருந்து தொழிற்சாலை வெடிப்பு சம்பவம்; 15 தொழிலாளர்கள் பலி

22/08/2024 06:55 PM

மலாக்கா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தென்னிந்தியாவில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில், தீ பரவியதைத் தொடர்ந்து குறைந்தது 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசத்தின், அச்சுதாபுரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயத்திற்கு ஆளாகினர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக போலீஸ் அதிகாரியான எம். தீபிகா தெரிவித்துள்ளார்.

இத்தீச் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனவே, அது குறித்து விசாரண மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு மாநில அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அனகாபல்லே மாவட்டத்தில் உள்ள 'Escientia' நிறுவனத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், ரசாயனம் மற்றும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.

சம்பவத்தின்போது பெரும்பாலான ஊழியர்கள் மதிய உணவுக்காக ஓய்வில் இருந்ததால், இதில் பாதிக்கப்பட்டவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)