பொது

சீனாவுக்கான மலேசியத் தூதரகத்திலும் தேசிய தினம் கொண்டாடப்பட்டது

31/08/2024 07:44 PM

சீனா, 31 ஆகஸ்ட் (பெர்னாமா) -- பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தில் கொண்டாடப்பட்ட 67-ஆம் ஆண்டு தேசிய தினத்தில் 200 மலேசியர்கள் கலந்து கொண்டனர்.

பெய்ஜிங்கில் உள்ள மலேசிய பிரதிநிதிகளின் துணைத் தலைவர் நோர்ஃபரினா முஹமட் அஸ்மீ உட்பட தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மலேசிய மாணவர்களும் இந்த தேசிய தினக் கொண்டாத்தில் கலந்து கொண்டனர்.

காலை மணி 8-க்கு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் நெகாராக்கூ பாடல் இசைக்கப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த தேசிய தினக் கொண்டாட்டம் பெய்ஜிங்கில் உள்ள மலேசியர்களிடையே நாட்டுப் பற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மலேசிய தூதரத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்ததாக பெய்ஜிங்கில் பயிலும் மாணவர் லாவ்நேஷ் நாகேந்திரா பூபத் கூறினார்.

''மலேசியத் தூதரகத்தில் தேசிய தினத்தைக் கொண்டாடுவது எனது முதல் அனுபவம். அதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். காரணம் வெளிநாட்டில் என் நாட்டின் தேசியப் பாடலைக் கேட்கவும் பாடவும் முடிந்தது. அதனால் நான் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்,'' என்றார் அவர்.

இதனிடையே, சிங்கப்பூரில், வழக்கமாக அனமைதியாகக் காணப்படும் ஜெர்வோயிஸ் சாலை இன்று மெர்டேக்கா முழுக்கத்துடன் கலை கட்டியது.

அச்சாலையில் உள்ள சிங்கப்பூருக்கான மலேசிய தூதரகத்தில் நடைபெற்ற மலேசிய தேசிய தின கொண்டாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை மணி 9க்கும் ஜாலுர் கெமிலாங்கை ஏற்றி நெகராக்கூ பாடலுடன் தொடங்கிய இக்கொண்டாட்டத்தில் ருக்குன் நெகாரா வாசிக்கப்பட்டதோடு, தூதரகத்தைச் சேர்ந்த 28 ஊழியர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)