புத்ராஜெயா, 08 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சிநிலை மாநாடு மற்றும் சீனா பங்கேற்கும் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், ஜி.சி.சி-இல் கலந்துகொள்ள மலேசியா சீனாவிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் நான்கு தொடங்கி ஏழாம் தேதி வரையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவிற்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தின்போது, அந்நாட்டுப் பிரதமர் லீ கியாங் மற்றும் அதன் அதிபர் சீ ஜின்பிங்கிற்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீனாவுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணம், இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்ற ஆசியான் நாடுகளுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று ஃபஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]