உலகம்

அமெரிக்கா மிசிசிப்பியில் பேருந்து விபத்து; எழுவர் பலி

01/09/2024 06:08 PM

அமெரிக்கா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- மிசிசிப்பியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்தனர்.

மேலும் 20-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.

சனிக்கிழமை காலை நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அறுவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகவும் மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த 37 பயணிகள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)