உலகம்

தென்மேற்கு சீனாவில் கடுமையான வெப்பத்தினால் வறட்சி, நீர் பற்றாக்குறை

01/09/2024 06:15 PM

சீனா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- தென்மேற்கு சீனாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, பல கிராமப்புறங்களில் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக சிச்சுவான் சிசுவான் மாகாணத்தில் நீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் கிராம மக்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் நீரை விநியோகித்து வருகின்றனர்.

வறட்சியினால் ஏற்படும் நீர் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்க விவசாய நீர்ப்பாசன முறை பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 11 நாட்களுக்கு அப்பகுதிகளில் வெப்ப அலை தாக்கி வருகிறது.

மேலும், இந்நிலை செப்டம்பர் மாதம் இறுதி வரை தொடரும் என்று உள்ளூர் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)